எட்டுக்குடி முருகன் திருக்கோயில் - எட்டுக்குடி - தல வரலாறு- தேவாரப் பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி - வள்ளி - தெய்வானை
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : சரவணப்பொய்கை தீர்த்தம்
வழிபட்டோர் : வான்மீகநாதர்

எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.

இங்குள்ள முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதமர்ந்து காட்சி தருகிறார்.

வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.

பக்தர்கள் தங்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் காட்சி தருவார்.

அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார்.

எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தனிக்கும் வகையில் தினந்தோறும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.

எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.


தல வரலாறு:

இப்பகுதி சோழ மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போது, தன் நாட்டைக் காக்கும் வகையில் முருகன் சிலையை வடிவமைக்கும் படி சிற்பிக்கு உத்தரவிட்டார். சிற்பியும் கலைநயமிக்க முருகனை சிலையாக வடிவமைத்துக் கொடுத்தார். மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதே போன்று இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார். இந்த சிலை தான் தற்போது சிக்கல் கோவிலில் உள்ள சிலை.

கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் சிற்பி அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்று அங்கு முருக பெருமானை வேண்டி தான் முன்பு செய்த அதே சிலையை போல் முருகன் சிலையை வடிவமைக்க, உயிர் ஓட்டமிக்க கல்லை தேர்வு செய்து, மீண்டும் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அச்சிலை உயிர்த்துடிப்புடன் அமைந்து ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலையும் உண்டானது. அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார். திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது, அப்போது இக்கிராமத்தை ஆண்டுவந்த முத்தரசன் என்ற குறுநில மன்னன் அச்சிலையைப் பார்வையிட்டார். மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ' எட்டிப்பிடி ' என்றார். எட்டுப்பிடி என்ற பெயர் தான் மருவி பின்பு எட்டுக்குடி ஆனது. மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். முருகனே நேரில் நிற்பது போல தோற்றம் கொண்ட அந்த முருகன் சிலைக்கு அங்கேயே மன்னர் கோவிலைக் கட்டினார். இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோவிலில் இன்றும் உள்ளது. தற்போதும், அச்சிலையில் இருந்து இரத்தம் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.


கோவில் அமைப்பு:

பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களின் திருவுருவமும் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாக நம்பப்படுகிறது.

கூத்தாடும் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

சிறப்புக்கள் :

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும்.

பவுர்ணமிக்கு முதல் தேரோட்டம் நடத்தப்படும். இவ்விழாவில் குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.

ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழா நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும்.

இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு.

இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள்.

போன்:  -

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு

திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலம் அடையலாம்.


எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.

வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.

பக்தர்கள் தங்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.

அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார்.


எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.