சாட்சிநாதர் திருக்கோயில்,அவளிவணல்லூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : சாட்சிநாதர்
அம்மன்/தாயார் : சவுந்தர நாயகி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி
வழிபட்டோர் : காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், பிரம்மன்,அகத்தியர், கன்வமகரிஷி, ஆதி சைவ அந்தணர், முருகப்பெருமான்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 163 வது தேவாரத்தலம் ஆகும்.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். 

சிவபெருமான் ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு காட்சி தந்து "அவள் இவள்" தான் என்று சுட்டிக் காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனம் அழைக்கப்பட்டது.


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து உள்ளது. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
இந்த 5 தலங்களையும் ஒரே நாளில் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.

தல வரலாறு:

இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை முடித்து மூத்த மருமகன் வீடு திரும்பினார், அப்போது மூத்த பெண் சுசீலை அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள்.

மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். மூத்த மருமகன் தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, இவள் என் மனைவியல்ல என்றும், உருவத்தில் ஒத்திருந்த அந்தணரின் இரண்டாவது பெண்ணை தான் என் மனைவி என்று வாதிட்டார்.

ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிராத்திக்க, சிவபெருமான் காட்சி தந்து மனம் தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே உன்னுடைய மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" தான் என்று சுட்டிக் காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும், இறைவன் சாட்சிநாதர் எனவும் அழைக்கப்பட்டது, மேலும் மூத்த பெண் சுசீலை இறைவன் அருளியவாறு இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப்  அம்மை  நீங்கி பழைய உடலும் கண்களும் பெற்றாள், கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள்.

இத்தலத்தில் இருக்கும் சப்தகன்னியரை செவ்வாய்க்கிழமை வழிபடுவது விசேஷமானதாகும். இத்தலத்தில் உள்ள வலஞ்சுழி, இடஞ்சுழி இரட்டை விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபட்டால் சங்கடங்கள் விலகி, சந்தோஷங்கள் மலரும். செல்வம் குவியும் என்பது நம்பிக்கை.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "சரதத்தால் ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி ஓதும் அவளிவணல்லூர் உடையோய்" என்று போற்றி உள்ளார்.

கோவில் அமைப்பு:

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

மூலவருக்குப் பின்னால் உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி சிவபெருமானை வழிபாடு செய்தார்.

சிறப்புக்கள் :

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.

திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை


போன்:  -

-

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.


மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் இருக்கும் சப்தகன்னியரை வழிபடுவது விசேஷமானதாகும்.