இறைவர் திருப்பெயர் : ஏடகநாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஏலவார்குழலி, மாதேவியம்பிகை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : பீரம தீர்த்தக்குளம், வைகைநதி
வழிபட்டோர் : பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர், சட்டைநாத சித்தர்
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர்
தல வரலாறு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 194 வது தேவாரத்தலம் ஆகும்.
காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. காசியிலுள்ள கங்கை இவ்வாறு தான் ஓடும்.
திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள ஏலவார்குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது.
இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
சம்பந்தர் எழுதிய " வாழ்க அந்தணர்' என்று பதிக ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை சேர்ந்தது. சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே "திரு ஏடு அகம்' எனப்பட்டு, "திருவேடகம்' என மருவியது.
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
சிவராத்திரியன்று பைரவர் பூஜை : எல்லாசிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு தான், இரவு நேரத்தில் நான்கு ஜாம அபிஷேகம், பூஜை நடைபெறும். ஆனால், திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர்.
பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்'' என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர்.
அதாவது, "அத்திநாத்தி' என்று எழுதிய ஏட்டினை சமணர்களும்," வாழ்க அந்தணர்' என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. போட்டி துவங்கியது. சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. சம்பந்தர் "வன்னியும் மத்தமும்' என்ற பதிகத்தை பாடினார். அப்போது ஏடு கரை சேர்ந்தது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே "திரு ஏடு அகம்' எனப்பட்டு, "திருவேடகம்' என மருவியது. இத்தலத்தில் அமைந்த கோயிலில் சுவாமி ஏடகநாதர், அம்பாள் ஏலவார் குழலியுடன் அருள் செய்கிறார்.
இரண்டு தீர்த்தங்கள் : பிரம்மன் உண்டாக்கிய பிரம்மதீர்த்தம் இங்குள்ளது. தற்போது இது காய்ந்து கிடக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு சித்தபிரமை நீங்கியதாம். இப்போதும் இதை தூரெடுத்து, படித்துறைகளை சீர்செய்தால், மிகப்பெரிய தீர்த்தம் ஒன்று காப்பாற்றப்பட்ட பெருமை கிடைக்கும். பக்தர்கள் இதற்குரியமுயற்சியை எடுக்க வேண்டும். இந்த பிரம்மதீர்த்தத்தில் தைமாதத்தில் மகத்தன்று தெப்பத்திருவிழா நடந்தது. தற்போது தண்ணீர் இல்லை என்பதால், தெப்பத்திற்குள் சுவாமியை வலம் வரச்செய்ய மட்டும் செய்கிறார்கள். இதுதவிர கோயில் முன்பு ஓடும் வைகைநதியும் மற்றொரு தீர்த்தமாக உள்ளது. இவ்வூரில் வைகைநதி தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. காசியிலுள்ள கங்கை இவ்வாறு தான் ஓடும். ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா மோட்சகதி அடைய வேண்டி வகையில் அஸ்தி கரைக்கிறார்கள். மேலும், பிறவியை முடித்த உயிர்கள் நற்கதி அடைவதற்காக மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் இந்தக் கோயிலில் உள்ளது.
எல்லாமே ஒரு நாள் : இங்கு 12 மாதமும் திருவிழா உண்டு. புரட்டாசி நவராத்திரி தவிர எல்லா விழாக்களுமே ஒருநாள் மட்டுமே நடக்கும் என்பதுவிசேஷம். கொடிமரம் இருந்தும், பிரம்மோற்ஸவம் நடைபெறுவதில்லை. சித்திரை முதல்நாளில் மட்டும் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
திருமண பிரார்த்தனை : துவாரபாலகர்களுக்கு புடவை: சிவன் கோயில்களில், சுவாமி சன்னதியில் இரண்டு துவார பாலகர்கள் பாதுகாப்பாக நிற்பர். அம்மன் சன்னதியில் துவார பாலகியர் இருப்பர். ஆனால், இங்குள்ள அம்பாள் மீது கொண்ட அன்பின் காரணமாக, சில சமயங்களில் அர்ச்சகர்கள், இந்த துவாரபாலகர்களுக்கு புடவையை உடுத்தி, தஏலவார்குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது.ுவாரபாலகிகளாக பாவித்துக் கொள்கிறார்கள்.
வயிற்றுவலி தீர நீராகார நைவேத்யம் : சட்டைநாத சித்தர் இவர் ஏழு இடங்களில் சமாதியானதாகச் சொல்கிறார்கள். இவர் திருவேடகத்திற்கு வந்த போது, செல்லும் வழியெல்லாம் லிங்கங்கள் பூமிக்குள் பதிந்திருப்பதைப் பார்த்து கால் வைக்கவே அஞ்சினார். அவரை சிறுவர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கோயிலுக்குள் விடுவார்களாம். அவர்களுக்கு ஆற்று மணலை பண்டமாக மாற்றி தந்தார் சட்டை நாதர். சட்டைநாதரும் அவருடன் தங்கியிருந்த சாதுக்களும், நீராகாரத்தில் திருநீறைப் போட்டு மக்களின் வயிற்று நோயினை போக்கினர். இப்போதும், நீராகாரம் கொண்டு வந்து சித்தர் அதிஷ்டானத்தின் மேலுள்ள லிங்கத்தின் முன்பு வைத்து, திருநீறிட்டு குடித்தால், வயிற்றுவலி தீருமென்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை நடக்கிறது.
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய கோயில், வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு ஐந்து நிலை கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன.
பிராகாரத்தில் அறுபத்து மூவர் சன்னதிகள், பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத்திருமேனிகள் உள்ளன.
விநாயகர்கள் : இங்குள்ள ஒரு தூணில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த நிலையிலுள்ள விநாயகரின் சிற்பம் வித்தியாசமாக இருக்கிறது. இவரை "செவிசாய்த்த விநாயகர்' என்கின்றனர். தன்னிடம் வரும் அன்பர்களின் வேண்டுதல்களையும், மனக்குறைகளையும் கேட்கும் விதத்தில் தன் காதினை நமக்கு காட்டி அமர்ந்திருப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டது. சம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏட்டினை திருவேடகத்தில் தடுத்து நிறுத்தி கரை சேர்க்க காரணமாக அமைந்தவர் விநாயகர். ஆற்றுநீரை எதிர்த்து வந்த ஏட்டின் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக நின்று, நான்கு மீன்களாக மாறி அதை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஏட்டை தன் துதிக்கையில் தாங்கி, படித்துறையில் அமர்ந்தார். இவரை "வாதில் வென்ற விநாயகர்' என்கின்றனர். கோயிலுக்கு வெளியே தனிக்கோயிலில் தற்போது அருள் செய்கிறார்.
ஏடகநாதர் லிங்க வடிவில் சற்று சாய்ந்த நிலையில் தோற்றமளிக்கிறார். அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு என்பதால் ஏலவார்குழலி என அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள சப்தமாதர்களில் வாராஹி அம்மனுக்கு பூமிக்கு அடியில் விளையும் கிழங்குவகைகள், எருமைத்தயிர்சாதம், எள்ளுருண்டை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் படைக்கின்றனர்.
இங்கு வடக்கு நோக்கி ஒரு துர்க்கையும், தெற்கு நோக்கி ஒரு துர்க்கையும் சன்னதி கொண்டுள்ளனர். இருதுர்க்கைகள் இருப்பதும் மாறுபட்ட ஒரு அமைப்பாகும். இங்கு சுவாமிக்கு தனியாகவும், அம்பாளுக்கு தனியாகவும் ராஜகோபுரங்களுடன் தனித்தனி வாசல்கள் உள்ளன.
இத்தலத்திற்கு வந்த சுந்தரர், ஞானசம்பந்தர் பாடி வழிபட்ட தலமாதலால் மிதிக்க அஞ்சி வைகை நதியில் தான் வந்த ஓடத்தில் நின்றபடியே ஏடகநாதரை தரிசித்துவிட்டு திரும்பி விட்டதைக் குறிக்கும் சிற்பம் இங்கு இருக்கிறது. சூரிய சந்திரர் இங்கு இணைந்து அருள்தருகின்றனர்.
சிறப்புக்கள் :
திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப் படுகிறது. திருமணஞ்சேரியைப் போல திருமணப் பிரார்த்தனைக்குரிய தலம் திருவேடகம்.
ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்.
போன்: -
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது.
© 2017 easanaithedi.in. All rights reserved