தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Modern

வணக்கம்!

அடியார்களுக்கு, அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம்! நான் குமரேசன் - ஒரு ஈசனடிமை,
 

எல்லாம் வல்ல ஈசன் .. பரம்பொருள்... எங்கும் நிறைந்துள்ளார்... இது என்னை உட்பட.....அனைத்து பக்தர்களுக்கும்... அடியார்களுக்கும் தெரிந்ததே...
இருந்தாலும்...
இந்த நாயடியேனையும் ஓரு பொருட்டாக எண்ணி ஈசன் 170 க்கும் மேற்ப்பட்ட தலங்களுக்கு என்னை அழைத்து சென்றுள்ளார்....

இதில் நான் சென்ற வழிபட்ட தலங்களில்,... இரு சக்கர வாகனத்தில் சென்று வந்தாலும் கூட... பல தலங்கள் கரடு..முரடாண வழிகள், சில தலங்கள் உள்ளடங்கிய கிராமங்கள் அவர்களுக்கு சரியான பேருந்து வசதி கூட இல்லை... என்னால் சில.. பல.. தலங்களை சிரமப்பட்டு தான் அடைய முடிந்தது....

இது போல தேடித்.. தேடி... சென்று ஈசனின் தலங்களை வழிபட்டதால்... ஈசனை தேடி... என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தேன்.... அதனால் தான் ஈசனை தேடி என்று வைத்திருக்கிறேன்.

இந்த இணையதளம் சென்னை , திருவாரூர் மற்றும் கும்பகோணம் மாவட்டங்களை சுற்றிலும் அமைந்துள்ள...., நான் சென்று வந்த பிரபலமான பாடல் பெற்ற தலங்கள், பாடல் பெறாத தலங்கள் , மற்றும் வைப்புத் சிவதலங்களை பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்.
 

கோவில்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளை - இணையத்தில் (internet) பல்வேறு தளங்களில் (websites) ஆராய்ச்சி செய்து மேலும் சம்பந்தபட்ட கோவில்களுக்கு நேரில் செல்லும்போது கோவில் குருக்களிடமும் மற்றும் அந்தந்த ஊரில் விவரம் தெரிந்தவர்களிடமோ, அல்லது கோவிலில் சம்பந்தபட்ட முக்கியமானவர்களிடமோ கேட்டு ஊர்ஜிதம் செய்து பின்பு இங்கே பதிவேற்றி உள்ளேன்.

என்னை போலவே இது உங்களுக்கும் பயன்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே!.

இது என் அப்பன் ஈசனின் அருளை தேடிய எனது பயணம்! இன்னும் செல்ல வேண்டிய தலங்கள் ஏராளம் உள்ளன!
சிவாய நம !சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
-திருமூலர்

சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள்!

சிவனை தவிர, யாருக்கும் அடிமை இல்லை;
 

உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன், நிலவு லாவிய நீர்மலி வேணியன்;

அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான்; மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

* தெய்வச் சேக்கிழார்