கோடீஸ்வரர் திருக்கோயில்,திருக்கொட்டையூர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன்/தாயார் : பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள்
தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு)
தீர்த்தம் : அமுதக்கிணறு
வழிபட்டோர் : ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 44வது தலம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 44 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் .

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது.


தல வரலாறு:

ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.

வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். மனித உருவிற்கு மாற வேண்டும் என்று  சிவபெருமானை வணங்கினான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மனமுருக வேண்டினான். இதையடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார்.

""கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே"  என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும்.

கோவில் அமைப்பு:

இக்கோயிலில் அக்டோபர் 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோடி விநாயகர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது.

அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஏரண்ட முனிவர் அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது , ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

சிறப்புக்கள் :

கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் .

இங்குள்ள தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

 

திருவிழா:

பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.
தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

போன்:  -

குருக்கள் 9486670043

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது.


மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் .

அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.

இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர்.

எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம்.