வன்மீகநாதர் திருநெய்பேர் - தல வரலாறு - தேவார வைப்பு தலம்

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவன் பெயர்: வன்மீகநாதர்
இறைவி பெயர்: உமா பரமேஸ்வரி
தேவார வைப்பு தலம். அப்பர் பெருமான் பாடல் - 1 .


தல வரலாறு:

நமிநந்தி அடிகள் அந்தணர் குளத்தில் பிறந்தவர். திருவாரூர் கோவிலில் விளக்கேற்ற சென்றார்.கோவில் அருகே உள்ள வீட்டில் சென்று விளக்கு எரிக்க எண்ணெய் கேட்டார். அங்கே இருந்த சமணர்கள் அவரை கேலி செய்து தண்ணீரால் விளக்கேற்ற கூறினார். நமிநந்தி அடிகள் நீரால் விளக்கு ஏற்றினார்.சமணர்கள் சைவ சமயத்தின் பெருமை உணர்ந்து  சைவத்தை தழுவினர்.திருவாரூர் கோவிலில் நடைபெற்ற விழாவில் பல தரப்பு மக்களும் வருவர். இவர்களால் தீண்ட பெற்ற நமி நந்தி அடிகள் தன வீட்டுக்குள் வராமல் நீராட சென்றார். நீராட வருவதற்கு முன்னர் தூங்கி விட்டார். கனவில் தோன்றிய சிவ பெருமான் திருவாரூரில் உள்ள அனைவரும் தன் பூத கணங்கள் என்று கட்டினர். தவறை திருத்தி கொண்டார் நமிநந்தியடிகள்.அடியவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.இப்படி போகிறது இவர் வரலாறு. 


சிறப்புக்கள் :

கோவிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தி அடிகள் உருவம் உள்ளது்.

அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ளது.

சுவாமி நீண்ட பாணம்.தனி சன்னதி.சுவாமி மற்றும் அம்மன் சன்னதி ஒரே கட்டடத்தில் உள்ளது.

திருவாரூர் கோவிலோடு இணைந்தது.போன்:   090471 46305

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 15-கி.மீ. தொலைவு. சென்றால் இத்தலத்தையடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சுவாமி நீண்ட பாணம்.தனி சன்னதி.சுவாமி மற்றும் அம்மன் சன்னதி ஒரே கட்டடத்தில் உள்ளது.
திருவாரூர் கோவிலோடு இணைந்தது.