noscript-img

சற்குணநாதேசுவரர் கோயில் - தல வரலாறு

படங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சற்குணநாதேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : சர்வாங்க நாயகி,
தீர்த்தம் : எம தீர்த்தம்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்
.

தல வரலாறு:

இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை என்கிற வரம் கிடைக்கும்.

இப்படி பிறப்பை அறுத்து மோட்சத்தை அருளும் தலம் என்பதால் இந்தத்தலத்தை கருவிலி என்பார்கள்.

கோவில்கள் நிறைந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்தபலன் இந்த ஒரு கோயிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்.

சற்குணன் என்ற மன்னன் இக்கோயிலில் வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்று மோட்சமும் பெற்றார். எனவே இக்கோயிலை அவர் கட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தட்சனின் யாக நிகழ்வின் பொது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப்பிடித்த மாதிரி ஈசன்(பித்தன்) ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.அப்போது ஈசனுடன் சேர்வதற்க்கு அன்னை பார்வதி அழகே உருவாக மிண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்சித்த இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது. முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார் எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிவிற்றிருக்கும் சர்வாங்கசுந்தரியின் அழகை வர்ணிக்க வார்தைகள் இல்லை. அதி அற்புதமாக விளங்குகிறாள். ஈசனுடன் இனைந்தத்தலமாத்லால் திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்குப் பாசக் கயிற்றை வீச, சிவபெருமான் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எனவே எமன் இங்கு வந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப்பெற்றான். இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும்.

கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.

ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள். கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.


போன்:  94429 32942, +91-4366-273 900

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மி. வந்தும் கருவேலி தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மி. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை.

கோவில்கள் நிறைந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்தபலன் இந்த ஒரு கோயிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்.

இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும்.

கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.